இனப்படுகொலையாளி ராஜபக்சாவின் புதல்வன் நாமல் ராஜபக்ச இங்கிலாந்தில் உரையாற்றுவதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் முழுமையான வெற்றி

Share

பிரித்தானியாவின் புகழ்பெற்ற உயர் கல்வி நிறுவனங்களான கேம்பிரிட்ஜ் மற்றும் ஓக்ஸ்போர்ட் யூனியன்களில் (Cambridge & Oxford Unions) இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் இனப்படுகொலையாளி ராஜபக்சாவின் புதல்வனுமாகிய நாமல் ராஜபக்ச உரையாற்றுவதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் முழுமையான வெற்றியைப் பெற்றுள்ளன.
இந்தநிலையில் அவருக்கு ஆதரவாகவும் புலம்பெயர் தமிழ் மக்களுக்கு எதிராகவும் சில ராஜபக்ச ஆதரவாளர்கள் தங்களுடைய கருத்துக்களையும் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றனர். எனினும் தமிழ் மக்கள் மட்டுமல்லாது சிங்கள் மக்களும் நாமல் ராஜபக்சவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை முக்கிய விடயமாக பார்க்கப்படுகின்றது. இந்த விடயம் ராஜபக்சாவின் குடும்பத்தினருக்கு மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை வங்ரோத்து நிலையை அடைய இருந்தவர்கள், மற்றும் யுத்தத்தை காரணம் காட்டி மக்களை ஏமாற்றியவர்கள் மற்றும் தமிழ் மக்களை அழித்தவர்கள் ராஜபக்சர்கள் என்று அவர்கள் பதிவிடுவதையும் காணக்கூடியதாகவுள்ளது.

நாமல் ராஜபக்சா உரையாற்றவிருந்த மேற்படி நிகழ்வை நடத்த வேண்டாம் என்று ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் யூனியன்களுக்கு 2000ற்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் அனுப்பப் பட்டதாக மிலிந்த ராஜபக்ச என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இந்த நிகழ்வை நடத்துமாறு ஒரு மின்னஞ்சலும் வரவில்லை, அவ்வாறு வந்திருந்தால் மறுபரிசீலனை செய்து பார்த்திருப்பார்கள். என்றும் சிலர் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்
தமிழ் மக்களின் நீதிக்கான குரலை ஏற்று கேம்பிரிட்ஜ் யூனியன் ஏற்கனவே பின்வாங்கிய போதிலும், ஓக்ஸ்போர்ட் யூனியன் மௌனம் காத்து வந்தது. ஆனால், தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் லண்டன் மட்டுமன்றி பிரித்தானியாவின் பல தூர இடங்களிலிருந்தும் திரண்டு வந்து பெரும் போராட்டத்தை நடத்தத் தயாரானார்கள். இந்தத் தீவிரமான உணர்வின் விளைவாக, ஞாயிற்றுக்கிழமை இரவு நாமல் ராஜபக்சவின் உரைகள் ரத்து செய்யப்பட்டன என மேற்படி பல்கலைக் கழகங்கள் அறிவித்தன.

பொதுவாக ஓக்ஸ்போர்ட் யூனியன் (Oxford Union) ஒருமுறை அறிவித்த பேச்சுக்கள் அல்லது உரையாடல் நிகழ்வுகளை எந்தக் காரணத்திற்காகவும் ரத்து செய்வதில்லை. கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதாகக் கருதும் அந்த நிறுவனம், நிகழ்வுகளை ரத்து செய்வது தனது புகழுக்கு இழுக்கு என்று கருதுவது வழக்கம்.

இருப்பினும், நாமல் ராஜபக்சவின் குடும்பம் தமிழ் மக்களுக்கு இழைத்த அநீதிகள் மற்றும் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளின் தீவிரத்தை உணர்ந்து, மாணவர் சமூகத்தின் கடும் எதிர்ப்பிற்குப் பணிந்து இந்த நிகழ்வை ரத்து செய்துள்ளது. இது ஒரு மிக அரிதான மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவாகும்.

நாமல் ராஜபக்சவின் பெற்றோர்கள் மற்றும் அவரின் குடும்பத்திற்குள் அடங்குபவர்கள் இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிராக இழைத்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் சொல்லொண்ணா துயரங்கள் உலகறிந்தவை. அந்தப் பாதகமான செயல்களின் தொடர்ச்சியாகவே இன்றும் ராஜபக்ச குடும்பத்தினர் பார்க்கப்படுகிறார்கள். அத்தகைய ஒரு பின்னணியைக் கொண்டவருக்கு உயரிய மேடைகளை வழங்குவது அறமற்றது என்பதைத் தமிழ் மாணவர் சமூகம் இங்கிலாந்தில் மிகத் தெளிவாக எடுத்துரைத்தது.

இந்த வெற்றிக்காகக் களத்தில் நின்ற மாணவர்களுக்கும், இவர்களை ஒருங்கிணைத்த (TYO) தமிழ் இளையோர் அமைப்பினர், தூர இடங்களிலிருந்து பயணப்பட்டு வரத் தயாராக இருந்த பொதுமக்களுக்கும், ஊடகங்களுக்கும், தமிழ் அமைப்புக்களுக்கும், இது தொடர்பாக மின்னஞ்சல்கள் தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்ட அமைப்புக்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எதிர்ப்புத் தெரிவித்த அமைப்புகள்: பிரித்தானியத் தமிழ் மாணவர் சங்கங்கள் (Tamil Student Unions of the UK), பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பு (TYO UK) மற்றும் Tamil Solidarity போன்ற அமைப்புகள் ஒருங்கிணைந்து இந்த எதிர்ப்புகளை முன்னெடுத்தன.

எதிர்ப்பிற்கான காரணங்கள்: ராஜபக்ச குடும்பத்தினர் மீதான போர்க்குற்றச்சாட்டுகள், மனித உரிமை மீறல்கள் மற்றும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்டதாகக் கூறப்படும் அநீதிகளுக்கு நீதி கோரி இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

சிங்களவர்களின் நிலைப்பாடு: இந்தப் பயணத்தின் போது அவர் லண்டன் பௌத்த விகாரைக்குச் சென்று வழிபாடு நடத்தினார். அங்கு ஒரு தரப்பு சிங்கள மக்கள் அவருக்கு ஆதரவாக இருந்தபோதிலும், சமூக ஊடகங்கள் மற்றும் பிற தளங்களில் இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைக்கு ராஜபக்ச குடும்பமே காரணம் எனப் புலம்பெயர்ந்த சிங்களவர்களில் ஒரு பகுதியினரும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்படி எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பாக — TCC-UK (தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா) அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில்

“எமது தாயக விடுதலைக்காகவும், நீதிக்காகவும் ஒன்றிணைந்து தொடர்ந்து பலமாகப் பணியாற்றுவோம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>