இன்று 22ம் திகதி வெள்ளிக்கிழமை ஸ்காபுறோ நகரில் நடைபெறும் ‘மிஸ் தமிழ் புனிவேர்ஸ் – 2023 விழாவின் ஆரம்ப வைபவம் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது

Share

இன்று 22ம் திகதி வெள்ளிக்கிழமை ஸ்காபுறோ நகரில் நடைபெறும் ‘மிஸ் தமிழ் புனிவேர்ஸ்-2023′ பிரமாண்டமான விழாவை .கனடாவில் இயங்கிவரும் அரஜனன் பியுட்டி அக்கடமி யின் ஸ்தாபகர்கள் திரு. திருமதி நரேந்திரா-சசிகலா ஆகியோர் இணைந்து வர்த்தக நிறுவனங்களின் ஆதரவோடு நடத்துகின்றனர்.

மிஸ் தமிழ் புனிவேர்ஸ்-2023’ இனது ஆரம்ப நிகழ்வு நேற்று வியாழக்கிழமை 21ம் திகதி ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள ஸ்காபுறோ கொன்வென்சன் சென்றர் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

ஊடக நிறுவனங்களின் சார்பில் உதயன் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் வாழ்த்துரை வழங்கினார்.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வருகை தந்துள்ள இலங்கையின் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் அவர்களும் பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்.

இன்றைய போட்டியில் இறுதி போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் மேடையில் தோன்றினர்.

– படங்களும் செய்தியும்: சத்தியன்-

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>