இயக்குநரும், தயாரிப்பாளருமான தக்காளி சீனிவாசன் உடல்நலக் குறைவால் பெங்களூரில் காலமானார். இவரது இறுதிச் சடங்குகள் இன்று பெங்களூரில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் தக்காளி சீனிவாசன். இவர்கள் வருங்கால தூண்கள், மனசுக்குள் மத்தாப்பு, நாளைய மனிதன், அதிசய மனிதன் போன்ற படங்களைத் தயாரித்துள்ளார். ஜென்ம நட்சத்திரம், விட்னஸ், அசோகவனம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். கமல்ஹாசனின் சூரசம்ஹாரம் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். தக்காளி சீனிவாசன் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>