இயக்குநர் மனு ஆனந்த் சமூக அக்கறையுடன் கூறிய படம் “மிஸ்டர் எக்ஸ்”

Share

ஶ்ரீவினித் ஜெயின், எஸ்.லட்சுமணன் குமார் ஆகியோரின் தயாரிப்பில், மனு ஆனந்த் இயக்கத்தில், ஆர்யா, கௌதம் ராம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியார், அனகா, அதுல்யா, ரைஷா வில்சன், காளி வெங்கட், ஜெயப்பிரகாஷ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “மிஸ்டர் எக்ஸ்”. இந்தியாவின் இராணுவ உளவுத்துறை அதிகாரியாக இருக்கும் சரத்குமார், உலகையே அழிக்கக்கூடிய அணு ஆயுதம் தயாரிக்கும் மூலப் பொருள் அடங்கிய ஒரு பேழையை இமயமலையில் பாதுகாத்து வருகிறார். இந்த பேழையையும் சரத்குமாரைய்யும் ரஷ்யா நாட்டின் இராணுவத்தினர் சிறைபிடித்து ரஷ்யாவுக்கு கொண்டு செல்கிறார்கள். அணு ஆயுத  மூலப் பொருள் பேழையை மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவர உளவுத்துறையில் பணியாற்றும் ஆர்யா,  ரஷ்யாவுக்கு தன் சக அதிகாரியான காளிவெங்கட்டுன் செல்கிறார். பேழையை ஆர்யா மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவரும் வேலையில்,  வில்லன் கௌதம் ராம் கார்த்திக் அப்பேழையை பாகிஸ்தானுக்கு விற்க கைப்பற்றுகிறார். அவரிடமிருந்து ஆர்யா அந்த பேழையை மீட்டாரா? இல்லையா? என்பதுதான் மீதிக் கதை. “ரா” உளவாளியாக நடித்திருக்கும் ஆர்யாவின் உடல் கட்டும், துணிச்சலும் அவரின் கதாபாத்திரத்துக்கு உயிரோட்டம் கொடுத்துள்ளது. சண்டை காட்சிகளில் தூள் பறத்துகிறார். சண்டை இயக்குனர் சிவாவின் தனிதிறமை திரையில் அதிர வைக்கிறது. ஒரு ஆங்கில படத்த்குக்கு இணையான சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார். உளவுப் பிரிவின் தலைவியாக நடித்திருக்கும் மஞ்சு வாரியார் எதிரிகளை துவசம் செய்யும் காட்சிகள் கைத்தட்ட வைக்கிறது. அருமையான துணிசாலான நடிப்பை கொடுத்துள்ளார். பெண் ரசிகர்களுக்கு அவரின் நடிப்பு உற்சாகத்தை கொடுத்துள்ளது. கௌதம் ராம் கார்த்திக் தன் வில்லத்தனத்தை புதுமையான வித்தியாசமான கோணத்தில் புன்னகையுடனே மிரட்டியுள்ளார். வில்லத்தனத்தில் ஒரு புதிய பரிணாம வளர்ச்சியை ஆரம்பித்துள்ளார் கௌதம் ராம் கார்த்திக். சரத்குமார். ஆத்யா, கௌதம் ராம் கார்த்திக் ஆகியோரின் பின்னணி என்ன என்பதை இயக்குநர் மனு ஆனந்த் ஓரிரு காட்சிகளில் விளக்கிவிட்டு மீண்டும் உளவுப்பிரிவுக்குள் செல்வது படத்தின் விறுவிறுப்புக்கு உதவி செய்கிறது. பனி படர்ந்த மலைப்பிரதேசங்களின் அழகையும் வானிலிருந்து பூமியை படம்பிடித்த்குக் காட்டும் காடைகளிலும் ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட் தனது கடின உழைப்பை கொடுத்துள்ளார். அருமையான படபிடிப்பு. படத்தை சலிப்புத்தட்டாமல் பார்க்க உதவியிருக்கிறது திபு நினன் தாமஸ்சின் பின்னணி இசை. நாட்டு மக்களை பாதுகாக்க இந்திய ராணுவத்தின் உளவு பிரிவினர்கள் தங்களது மனைவி, மக்கள், பெற்றோர்களுக்கே தாம் யார் என்று தெரிவிக்காமல், தன் உயிரையே கொடுத்து நாடு அமைதிப் பூங்காவாக இருக்க பாடுபடுகிறார்கள் என்பதை இயக்குநர் மனு ஆனந்த் சமூக அக்கறையுடன் இப்படத்தின் மூலம் நமக்கு எடுத்துக் கூறியுள்ளார். மிஸ்டர் எக்ஸ் இரண்டாம் பாகத்திற்கும் வழிவகுத்துள்ளார் இயக்குநர் மனு ஆனந்த்

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>