இயக்குநர் ரத்னகுமார் இயக்கும் படம் “29”

Share

ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் நிறுவனம் “29” என்ற திரைப்படத்தை வெரும் மே மாதம் 8 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இந்நிறுவனம் சார்பில் கே.விஜய் பாண்டி முன்னின்று மேற்கொள்கிறார். “29” திரைப்படம் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் மற்றும் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இயக்குநர் ரத்னகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார். 2000 ஆண்டின் காதலை மையப்படுத்திய ஒரு உணர்ச்சிப்பூர்வமான படைப்பாக, அனைத்து வணிக  அம்சங்களுடன் இப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்தில் நாயகனாக விது நடித்துள்ளார். கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். மேலும் மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், பிரேம் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 2000ம் ஆண்டுகளின் காதல் உணர்வுகளை, அந்த காலத்து நினைவுகளையும் மனநிலையையும் அழகாக பிரதிபலிக்கும் விதத்தில் இப்படம் உருவாகியுள்ளது. மொத்தத்தில், புதிய முயற்சிகளுக்கும் தரமான கதை சொல்லலுக்கும் முக்கியத்துவம் அளித்து வரும் ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் நிறுவனம், “29” திரைப்படத்தின் மூலம் தனது வளர்ச்சிப் பாதையில் இன்னொரு முக்கியமான படியை எடுத்து வைக்கிறது. காதல், நினைவுகள் மற்றும் உணர்ச்சிகளை இணைக்கும் இந்த படம், மே 8 அன்று திரையரங்குகளில் ரசிகர்களுக்கு ஒரு இனிய அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>