இயக்குனர் மணிரத்னத்தின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி?

Share

தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி தற்போது கருப்பன், 96 பாகம் 2, ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், சீதக்காதி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் அடுத்ததாக பிரபல இயக்குனரான மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு ஒரு வருடம் தேதி வேண்டும் என்று மணிரத்னம் கேட்டு இருக்கிறார். விஜய் சேதுபதியும் அதற்கு சம்மதித்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது. ரொமான்டிக் கதைக்களத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் நடிகை சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>