இயற்கை அனர்த்தம் காரணமாக நன்நீர் மீன்பிடியில் வடக்கில் 1,500 மில்லியன் இழப்பு.

Share

ந.லோகதயாளன்.

இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தின்போது வடக்கு மாகாணத்தில் நன்நீர் மீன்பிடியாளர்களிற்கு ஆயிரத்து 500 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக நெக்டா நிறுவனம் அறிக்கையிட்டுள்ளது.

நிக்வா புயலின் காரணமாக ஏற்பட்ட பாதிப்பில் அகப்பட்டு வடக்கின் 5 மாவட்டங்களிலும் நன்நீர் பிடியாளர்கள் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளனர்.

இதற்கமைய மன்னார் மாவட்டத்தில் 387 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதோடு
வலைகள், 44 படகுகள் மற்றும் 110 சாதனங்களும் அழவடைந்துள்ளது. இதேபோன்று 27 கடல் அட்டைப் பண்ணைகளும் 04 இறால்ப் பண்ணைகள் மற்றும் 7 நண்டுப் பண்ணைகளும் அழிவடைந்துள்ளன. இதற்கமைய மன்னார் மாவட்டத்தில் 200 மில்லியன் ரூபா சொத்து அழிவடைந்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் 6 குளங்களில் தொழிலில் ஈடுபடும் 338 மீனவர்கள் பாதிப்படைந்துள்ளள, 173 கடல் அட்டைப் பண்ணைகள், 24 பாசி வளர்ப்பு இடங்கள் ஆகியவற்றுடன் 37 படகுகள் வலைகள் என்பன இழந்து 231 குடும்பம் பாதிப்படைந்துள்ளது. இதற்கமைய கிளிநொச்சியில் 180 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 33 கடல் அட்டை 33 பண்ணைகள் அழிவடைந்ததோடு 39 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. இதனால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 10 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்திலே 13 குளத்தைச் சேர்ந்த 97 படகுகள் அழிவடைந்ததோடு அதிக வலைகளும் அள்ளிச் செல்லப்பட்டு விட்டது. இவற்றின் மூலம் 601 குடும்பங்கள் பாதிக்கப்பட்டதனால் முல்லைத்தீவில் 290 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் 9 குளத்தைச் சேர்ந்த 24 படகுகள், 371 வலைகள் அழிவடைந்தமையால் 147 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

இதேபோன்று கடல் அட டைப. பண்ணைகள் அழிவடைந்தமையால் யாழில் 35 மில்லியன் ரூபாவும், மன்னாரில் 270 மில்லியன் ரூபாவும், கிளிநொச்சியில் 188 மில்லியனும் அழிவடைந்துள்ளன.

4 இறால் பண்ணைகள் அழிவடைந்ததோடு, வளர்க்கப்பட்ட பாசியில் 50 தொன் இல்லை எனவும் பாசி ஒரு கிலோ 70 ரூபா வீதம் 60 மில்லியன் ரூபா என வடக்கில் மொத்தம் 1,500 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக நெக்டா அமைப்பு அறிக்கையிட்டுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>