இரத்தினபுரி வாகன விபத்தில் கணவன் மனைவி பலி.

Share

(12-05-2023)

இரத்தினபுரி கொழும்பு வீதி திருவனகெட்டிய பிரதேசத்தில் இன்று காலை இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

தனியார் பேரூந்தில் மோதிய பின்னர் லொறி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த இருவரும் கஹவத்தை பொரனுவ லோவர் டிவிஷனை சேர்ந்த கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இருவரின் சடலங்களும் இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு உயிரிழந்த பெண் கர்ப்பிணி பெண் என தெரியவந்துள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>