— மாவட்ட ஈபி.டி.பி கட்சி ஒருங்கிணைப்பாளரும் வர்த்தகரான அந்தனிசில் ராஜ்குமார்–
(கனகராசா சரவணன்)
கடந்த காலத்தில் ரணில் விக்கிரமசிங்கவிடம் 400 மில்லியன் ரூபாவை பெறும் போது சர்வதேச விசாரணையை கோர மாட்டோம் அல்லது சிங்கள குடியேற்றங்களை தடுக்க மாட்டேன் என்றா? உடன்படிக்கை செய்து கொண்டது? இவ்வாறு சஜித் பிரேமதாசவின் மேடையில் ஏறி வாக்களிக்குமாறு கூறியபோது சஜித்துடன் என்ன என்ன உடன்படிக்கை செய்து கொண்டார்கள் என மக்களுக்கு நா.உறுப்பினர் இரா.சாணக்கியன் தெளிவுபடுத்த வேண்டும் அதேவேளை மகிந்தவின் காட்டு சட்டத்தை மட்டக்களப்புக்கு கொண்டுவரக் கூடாது என மாவட்ட ஈபி.டி.பி கட்சி ஒருங்கிணைப்பாளரும் வர்த்தகரான அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியா ஊடக கற்கை நிலையத்தில் 13ம் திகதி அன்று திங்கட்கிழமை (13) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த மாதம் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் என் மீது கடுமையான பொய் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார் அந்த பொய்குற்றச்சாட்டானது தேசத்துக்கு மகுடம் என்ற திட்டத்தில் கிழக்கு மாகாணத்திற்கு மீனவர்களுக்காக 9 மண்ணெண்ணை நிரப்பும் நிலையங்கள் வழங்கப்பட்டது
இதில் 7 மண்ணெண்ணை நிலையங்கள் செயலிழந்து இயங்கா நிலையில் பாழடைந்துள்ளதுடன் இரண்டு மண்ணெண்ணை நிலையங்கள் மாத்தியம் இயங்கி வருகிறது இந்த இரண்டையும் கடற் தொழில் நீரியல் வள திணைக்களம் அந்தந்த பகுதி மீனவர் சங்கங்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கினார்.
இதன் பின்னர் மீனவர் சங்கங்களில் இருந்து நான் பகிரங்க கேள்வி மனுவில் குத்தகை அடிப்படையில் பாலமீன்மடு, களுவங்கேணி ஆகிய இரண்டு மண்ணெண்னை நிரப்பு நிலையங்களை நான் பெற்றிருக்கிறேன் அதனை தவறாக அரச அதிகாரிகளுக்கு முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் எனக்கு வழங்கப்பட்டது என அவர் கூறியிருப்பது நான் வன்மையாக கண்டிக்கின்றேன் அதேவேளை அவரிடம் ஆவணங்கள் இருப்பின் என்னுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு சவால் விடுக்கின்றேன்.
நான் சட்டத்திற்கு முரணாக அதை பெற்றுக் கொள்ளவில்லை அதை டக்ளஸ் தேவானந்த தரவும் இல்லை. கடந்த காலத்தில் தேசத்துக்கு மகுடம் திட்டத்தின் கீழ் மகிந்த ராஜபக்சவினால் மீனவர் சங்கங்களின் வளர்ச்சிக்கு நீண்ட கால குத்தகையின் அடிப்படையில் பாலமீன்மடுவில் இருக்கின்ற மீனவர் சங்கங்களுக்கு வழங்கப்பட்டது
இதனை நான் அவர்களிடமிருந்து குத்தகையின் அடிப்படையில் உரிய முறையில் சட்டத்தரணிகள் ஊடாக கால காலமாக பெற்று வருகின்றேன். இருந்தபோதும் அவர் களுவங்கேணியில் எனது குத்தகை உடன்படிக்கை முடிவுற்றதும் மீனவர் சங்கங்கள் தனக்கு கடிதம் வழங்கியதாகவும் எனக்கு வழங்க வழங்கவேண்டாம் எனவும் நான் சட்டத்திற்கு முரணான முறையில் அவற்றை இயக்கி வருவதாக பொய்யாக தெரிவித்துள்ளார்.
எனவே என்னிடத்தில் அத்தனை ஆவணங்களும் இருக்கின்றதுடன் எனது குத்தகை காலம் 16-5-20025 முடிவுற்றதுடன் மீனவர் சங்கங்கள் விசேட பொதுக்கூட்டம் நடத்தி அதில் அத்தனை மீனவர்கள் மீனவர் சங்க தலைவர்கள் மற்றும் கடற்றொழில் நீரியல் திணைக்கள பரிசோதகர் உட்பட்டவர்கள் அதனை எனக்கு இன்னும் ஒரு வருட காலத்துக்கு வழங்குமாறு கையொப்பமிட்டுள்ளனர்
இது களுவங்கேணி மீனவர் சங்கத்துக்கு வழங்கப்பட்டது இதனை அவர்களிடமிருந்து நான் குத்தகை அடிப்படையில் பெற்றுக் கொண்டேன் இது முன்னாள் அமைச்சர் டக்ளஸ் எனக்கு வழங்க வில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் பொய்யான குற்றச்சாட்டை வன்மையாக கண்டிக்கின்றேன்.
அத்தோடு அவர் என் மீது தொடர்ச்சியாக பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றமை க்கான காரணம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட 400 மில்லியன் ரூபாய் மோசடி இருப்பதை அறிந்து இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு நான் முறைப்பாடு செய்திருக்கின்றேன் எனவே சாட்சிகளை அச்சுறுத்துவதற்காகவே எனது தொழிலை முடக்குவதற்கு முயற்சி செய்து இவ்வாறு வேலைகளை செய்து என்னை அச்சுறுத்துகிறார்.
கடந்த காலத்தில் ரணில் விக்கிரமசிங்கவுடன் 400 மில்லியன் ரூபாவை பெறும் போது சர்வதேச விசாரணையை கோரமாட்டோம் என்றா? அல்லது சிங்கள குடியேற்றங்களை தடுக்கமாட்டோம் என்றா? உடன்படிக்கை செய்து கொண்டாரா? இவ்வாறு எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் மேடையில் ஏறி மக்களை அவருக்கு வாக்களிக்குமாறு கூறியபோது சஜித்துடன் என்ன உடன்படிக்கை செய்து கொண்டிர்கள்?
நீங்கள் மட்டக்களப்பு மக்களை மடையன் என்று நினைத்து நீங்கள் உங்கள் தேவைக்கு ஏற்றால் போல பயன்படுத்த கூடாது மக்கள் அடுத்த தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள் என்பதுடன் 65 ஆயிரம் வாக்குகளை பெற்ற பொறுப்பு வாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆன நீங்கள் ரணில் மற்றும் சஜித்துடன் என்ன உடன்படிக்கை செய்து கொண்டது என மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள்,
அத்தோடு களுவங்கேணியில் உள்ள மீனவர் சங்கமானது மண்ணெண்னை விநியோகத்தை துண்டித்தது தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் அதற்கு பின்னர் அவர்கள் சிபாரிசு செய்வதாக பதில் கடிதம் அனுப்பியுள்ளது டன் கடற்றொழில் அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
அதன்பின்னர் கடற் தொழில் நீரியல் வள திணைக்கள பணிப்பாளர் ஜெனரல் மீண்டும் மீனவர் சங்கத்துக்கு ஊடாக எனக்கு ஒரு வருடத்துக்கு வழங்குமாறு கூறியுள்ளார் அதற்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றீர்கள் அரச அதிகாரிகளை அச்சுறுத்வது எதற்காக? நீங்கள் கடந்த காலங்களில் இங்கு இயங்கி வந்த ஆயுத குழுக்கள் போன்று செயற்படுகின்றீர்களா?
சிறிலங்கா சுதந்திர கட்சி ஊடாக அரசியலுக்கு பிரவேசித்து மஹிந்த ராஜபக்ஷவின் மடியில் தவந்த போது தான் எனக்கு கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனரத்தின பாலமீன்மடு எரிபொருள் நிலையம் வழங்கப்பட்டது எனவே உங்கள் பொய் முற்று முழுதாக வெளிச்சத்துக்கு வருகிறது மகிந்த ராஜபக்ஷவின் காட்டு சட்டத்தை இங்கு கொண்டுவரக் கூடாது தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்ற பழமொழி போல நீங்கள் அரசியலில் புகுந்த மகிந்தவின் காட்டு சட்டத்தை தமிழரசு கட்சிக்குள் இருந்து கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்துக்குள் கொண்டுவரக் கூடாது என கேட்டுக் கொள்கிறோம்.
அதேவேளை என் மீது வைத்த பொய் குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் உங்களுக்கு எதிராக நான் நீதிமன்றத்திலும் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்து தகுந்த நடவடிக்கை எடுப்பேன் என்றார்.