‘இறுதிப்பக்கம் 2’ படத்தின் பதாகை வெளியானது

Share

குமரன் தங்கராஜன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இறுதிப்பக்கம் 2’ படத்தின் பதாகை வெளியானது. மனோ வெ கண்ணதாசன் இயக்கத்தில் வெளியான ‘இறுதிபக்கம்’ படத்தின் அடுத்த படைப்பாக ‘இறுதிப்பக்கம் 2’ உருவாகியுள்ளது. இப்படத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புகழ் குமரன் தங்கராஜன், ஸ்மேகா, ராஜேஷ் பாலசந்திரன், அபிஷேக் ஜோசப், சத்யா ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், ‘இறுதிபக்கம் 2’ படத்தின் முதல்காட்சி பதாகையை நடிகர் மணிகண்டன் வெளியிட்டுள்ளார்.

வெளியாகியுள்ள முதல்காட்சி பதாகையில், ரத்த வெள்ளத்தில் தலைகீழாக கிடக்கும் பெண், அவரைச் சுற்றி சிதறிக் கிடக்கும் தட்டு, கத்தி, ஸ்பூன், போர்க், மரக்கரண்டி உள்ளிட்ட பொருட்களுடன், அந்த ரத்தக் காட்சியைக் கடந்து செல்லும் நீல நிற கார் என மர்மத்தையும் பதற்றத்தையும் ஒரே பார்வையில் கடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பெண்ணைச் சுற்றி பரவியிருக்கும் ரத்தம் காரின் பாதையாக நீளும் காட்சி, இந்தக் கொலையின் பின்னணியில் இருக்கும் மர்மத்தையும், கதையின் விசாரணைத் தன்மையையும் உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>