இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் யாழ். பொதுசன நூலகத்திற்கு விஜயம்!

Share

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் 18ம் திகதி செவ்வாய்க்கிழமை (18) யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு பார்வையிட்டுள்ளார்.

இதன்போது நூலகத்தில் யாழ். மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன், இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸை வரவேற்று கலந்துரையாடினார்.

குறித்த சந்திப்பில் யாழ். பொதுசன நூலக நூலகர் உள்ளிட்ட சில உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்த விஜயத்தின் போது கனடிய உயர் ஸ்தானிகர் நூலகத்திலுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் விஜயம் செய்து ஒவ்வொன்றையையும் உ ன்னிப்பாகப் பார்த்து அவை பற்றி மாநகர ஆணையாளரிடம் கேட்டறிந்து கொண்டதாகவும் எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>