இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனை தனது அலுவலகத்திற்கு அழைத்து கௌரவித்த மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி!

Share

கனடாவின் ஒன்றாரியோ மாகாண அரசின் உறுப்பினரும் முக்கிய அமைச்சு ஒன்றின் பாராளுமன்றச் செயலாளரும் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் பட்டதாரியுமான லோகன் கணபதி அவர்கள் அலுவலகத்தில் எடுக்கப்பட்ட படம் இங்கு காணப்பெறுகின்றது.

தற்போது கனடாவிற்கு வருகை தந்துள்ள இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினரும் வடக்கு- கிழக்கு- மலையகம் என அனைத்துப் பகுதிகளிலும் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல் மற்றும் அரசியல் பிரச்சனைகள் தொடர்பாக தொடர்ச்சியாக குரல் எழுப்பி வரும் மனோ கணேசன் அவர்களை தனது உத்தியோகபூர்வமான அலுவலகத்திற்கு அழைத்து கௌரவித்த லோகன் கணபதி எம்பிபிஅவர்கள் மனோ கணேசன் அவர்களுக்கு ஒன்றாரியோ மாகாண முதல்வரின் வாழ்த்து மடலை வாசித்து வழங்குவதை இங்கு காணலாம். படத்தில் ‘கனடா உதயன்’ லோகேந்திரலிங்கமும் காணப்படுகின்றனர்

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>