தனக்கு மட்டுமன்றி பிறிதொரு நாட்டிற்கும் சேர்த்தே உளவு பார்ப்பதாக ‘கசிந்துள்ள’ தகவல்
இந்தியாவின் பரம எதிரிகளான பாகிஸ்தான் மற்றும் சின நாடுகள் இந்தியாவின் சகல திசைகளிலும் நிலை எடுத்து தமக்கான பணியை முன்னெடுப்பர் என்பதில் சந்தேகம் இல்லை. இதற்காக இந்தியாவிற்கு அண்மையாக உள்ள வடக்கின் 3 மாவட்டங்களில் அதிக கரிசணைகாட்டுவது ஒன்றும் ஆச்சரியம் இல்லை் இதற்காக தமது உளவுப் பணியை முன்னெடுக்க எவ்வளவு நிதியையும் செலவு செய்யத் தயாராக உள்ள சீனாவின் உளவுப் பணியில் பயிற்றப்பட்ட சீனர்களை நேரடியாகப. பயன்படுத்துவதற்கு ஒரேயொரு பெரும் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர் அதாவது வடக்கு தமிழர்கள் மத்தியில் ஒரு சீனர் நின்றாலும் இலகுவில் அடையாளம் காணக்கூடிய முகத்தோற்றத்தை கொண்டவர்கள் என்பது மிகப் பெரும் பாதிப்பை சீனா எதிர்கொள்கின்றது.
இந்த விடயத்தை மாற்றியமைக்க திட்டமிட்ட சீனா இலங்கைத் தமிழர்களின் தோற்றத்தை ஒத்த தமது விசுவாசிகளை களம் இறக்கும. நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இதற்காக அண்மை் காலத்தில் அதிக பாகிஸ்தானியர்கள் தருவிக்கிப்படுகின்றனர்.
இதன்போது சிலர் பாகிஸ்தானின் கலாச்சார உடையை ஒத்த ஆடையை அணிந்தாலும் சிலர் இலங்கைத் தமிழர்கள் அணியும் ஒத்த ஆடையும் அணிகின்றனர். இப்போது சீனா ஒரு கல்லில் இரண்டு மாங்காயை வீழ்த்துகின்றது. அதாவது பாகிஸ்தானிடமிருந்து தமக்கு தேவையான தரவைப் பெறுவது மட்டுமன்றி பாகிஸ்தானும் இந்தியாவிற்கு எதிராக செயல்படும்.
கடந்த ஒரு மாத காலத்தில் மன்னாரில் பாகிஸ்தானியர்கள் முகாமிட்டுள்ளனர். கிளிநொச்சியில் இரு வர்த்தக நிலையத்தை நடாத்துகின்றனர். வடக்கிற்கு பயணித்த 13 நாட்டு இராணுவ அதிகாரிகள் அணியிலும் பாகிஸ்தான் கேணல் தர அதிகாரி அங்கம் வகித்தார். இவை அனைத்திற்கும் அப்பால் 2025-10-22 அன்று கொழும்பில் பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் பாகிஸ்தான் இலங்கை இராணுவ அதிகாரிகள் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இங்கே குறிப்பிட்டவை வெளியே அறிந்த சில விடயங்கள் என்பதும் விசேட அம்சமாகும்.