இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிரான பிரேரணையை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்து கைஉயர்த்தியிருக்க வேண்டும்.

Share

ஏன் அவர்கள் மௌனம் காத்தார்கள் என – கி.மா.சபை முன்னாள் உறுப்பினர் இரா. துரைரெட்ணம் கடும் கண்டனம்

(கனகராசா சரவணன்)

கடந்தகால ஜனாதிபதிகளுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டு வந்த பிரேரணை க்கு எதிர்த்து வாக்களிக்க வேண்டிய சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகள் ஏன் மௌனம் காக்கவேண்டும் என தமிழ் மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது என தமிழ் பிரதிநிதிகள் பதில் சொல்லி ஆகவேண்டும் என ஈ.பி,ஈர்.எல்.எப் மத்திய குழு உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான இரா. துரைரெட்ணம் வன்மை கண்டனம் தெரிவித்துள்ளார் கடந்த 16ம்திகதி செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

புதிய அரசாங்கம் கடந்த ஜனாதிபதிகள் சிறப்பு உரிமைகளின் கீழ் மக்களின் வரிப்பணத்தில் சுகபோகவாழ்கையில் ஈடுபடமுடியாது ஊழல் மோசடி துஸ்பிரயோகத்துக்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பிரேரணை அதிகூடிய வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களை கடந்த கால ஜனாதிபதிகளாக இருந்தவர்கள் இனபடுகொலை புரிந்துள்ளதுடன் இனப்பிரச்சனை தொடர்பாக எந்த தீர்வும் முன்வைக்கப்படவில்;லை மட்டுமல்ல மக்களின் விரிப்பணத்தை அறவிட்டு அந்த வரிப்பணத்தில் இருந்து துஸ்பிரயோம் செய்து வந்ததற்கு எதிராக கொண்டு வரப்பட்டு பாராளுமன்றத்தில் முன்வைக்கும் போது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அந்த பிரேரணையை ஆதரித்து வாக்களிக்க வேண்டியது அவர்;களது இறைமையாகும்.

ஆனால் சிறுபான்மை கட்சிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் ஏன்? மௌனம் காக்க வேண்டும் என வடகிழக்கு தமிழ் மக்கள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வி மிக உச்சகட்டத்துக்கு வந்துள்ளது எனவே தமிழ் பிரதிநிதிகள் பதில் சொல்லி ஆகவேண்டும்.

அதேவேளை தமிழ்கள் இன பிரச்சனை தொடர்பாக இந்த புதிய அரசு எந்த வசனத்தையோ அதிகார பங்கீடு தொடர்பாக எந்த விடையத்தையும் பேசுவதில்லை
எனவே மாகாணசபை தேர்தலை நடாத்துவதற்கு பாராளுமன்றத்தில் பிரேரணைகளை கொண்டுவந்து அதனை மிக விரைவாக நடாத்த வேண்டும்

மாகாணசபை அமுல்படுத்தப்பட்ட காலங்களில் மக்களின் காலடிக்கு நேரடியாக அதிகாரத்தை கொண்டுபோககூடிய ஒரு சூழல் இருந்தது இந்த மாகாணசபை முறைமை தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுக்கே முஸ்லீம் மக்களுக்கே மட்டுமல்ல நாட்டில் உள்ள அனைத்து மக்களும் மாகாணசபையால் நன்மை பெற்று இருக்கின்றார்கள் என்பது கடந்த கால யதார்த்தமாகும்.

தென்னிலங்கையில் மாகாணசபையில் 60 க்கு மேற்பட்ட நியதிச்சட்டங்களை உருவாக்கி மாகாண சபை அதிகாரங்களை கொண்;டு திறம்பட செயற்பட்டது இதனால் அதிகூடிய நன்மை பெற்றது சிங்கள மக்களே என்பதை இந்த அரசு மறந்துவிடக் கூடாது இது தமிழருக்கு தாரைவாத்து கொடுக்கப்பட்ட விடையமல்ல ஆனால் மக்களுக்கு நேரடியாக அதிகாரத்தை கொண்டு செல்வதற்கான வழி முறை அது இந்த மாகாணசபை முறையே எனவே இதனை அமுல்படுத்தப்படுவதால் மக்கள் சில நன்மைபெற கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றது

வடக்கு கிழக்கில் சில உப விதிகளை தயாரித்து அதை அமுல்படுத்தும் போது தானாக சில அதிகாரங்களை பெறக் கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றது அந்த வாய்ப்புக்களை இந்த புதிய அரசு தமிழ் மக்களுக்கு எந்தவித துரோகமும் செய்யாமல் ஏமாற்றாமல் வழங்கவேண்டும் கடந்த 50 வருடமாக ஜனநாயகத்தை சுதந்திரத்தை, அதிகார பங்கீட்டை பெறுவதற்காக ஆயுதங்களை தூக்கிய இதே தமிழர்களை போல ஜே.வி.பியும் இந்த போராட்டத்தில் மேற்கொண்டிருந்தன அவர்களின் உரிமைனகளை ஏற்றுக் கொள்ள வேண்டுமாயின் எங்களின் உரிமைகளை அவர்கள் ஏற்;கொண்டே ஆகவேண்டும் நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல என நிரூபிப்பதற்காக புதிய அரசு மாகாணசபை முறைமைகளை செயற்படுத்தி கொடுப்பார்கள் என நம்புகின்நோம்

மாகாணசபை முறைமையை பொறுத்தமட்டில் மக்களின் கைகளில் வீடு வீடாக அதிகாரம் செல்ல வெண்டுமாயின் பல நியதி சட்டங்களை உருவாக்குகின்ற பொறுப்பு இருக்கின்றது ஏற்கனவே கிழக்கில் 5 நியதிசட்டம் உருவாக்கப்பட்டிருந்தது இன்னும் 66 நியதிசட்டம் உருவாக்கும் வாய்ப்புக்கள் இருந்தது அதனை உருவாக்கினால் அதிகாரங்கள் மக்களுக்கு சென்றடையும்.

கிழக்கு மாகாணத்தில் 40 வீதம் தமிழ்ர்கள் 36 வீதம் முஸ்லீம்கள் 23 வீதம் சிங்களவரும் வாழுகின்ற கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக தமிழர்கள் வாழ்கின்றனர் எனவே 37 மாhணசபை உறுப்பினர்களை கொண்ட சபைiயில் 18 க்கு மேற்பட்ட உறுப்பினர்களை பெரும்பான்மையாக ஒரு கட்சி பெறும் பட்சத்தில் அவர்கள் ஆட்சியை அமைக்க முடியம்..

அந்த நேரத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவர் முதலமைச்சாரக வரவேண்டு மாயின் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் தமிழ் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஓரணில் நின்று தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் தமிழர் ஒருவரை முதலமைச்சராக பெறுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றது

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு இருக்கின்ற வாக்குகள் வேறு தரப்புக்கு விளக்கூடிய இன்று உள்ள சூழ்நிலையில் அதவாவது ஏற்கனவே பாராளுமன்ற தேர்தல் உள்ளுராhட்சி மன்ற தேர்தல்களில் வேறு வேறு பிரதிநித்த்துவ கட்சிகளும் தேசிய கட்சிகளும் தமிழ் பிரதிநிதித்துவத்தை பெற்றுள்ளனர்

இந்த சூழ்நிலையில் தமிழ் கட்சிகள் பிரிந்து கேட்பார்கள் ஆனால் தமிழர்களின் முதலமைச்சருக்கு கேள்விக்குறியை உண்டாக்குவதற்கு தமிழ் கட்சிகள் வழி அமைக்காது என நம்புகின்றென் எனவே கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வரவேண்டுமாயின் தமிழர்கள் ஒன்று சோந்ந்து கேட்கும் பட்சத்தில் வரமுடியும் என்றார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>