இலங்கையின் வட மாகாணத்தில் மாத்திரம் கால் நடைகளில் இறப்பினால் மூவாயிரம் மில்லியன் ரூபா இழப்பு

Share

ந.லோகதயாளன்.

இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அணர்த்தம் காரணமாக வடக்கு மாகாணத்தில் கால் நடை இழப்பினால் 3 ஆயிரம் மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கால்நடைத் திணைக்களம் உறுதி செய்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் மிக அதிகமான கால் நடை இழப்பு மாவட்டமாக மன்னார் மாவட்டம் முழுமையாகவும் வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்கள் பாதி அளவிலும் கால. நடைகள் அழிவடைந்தமை இதுவரை கண்டுகொள்ளப்பட்டுள்ளது. இதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்திலும் கணிசமான அளவிலும் யாழ்ப்பாணத்தில் சுமார் 350 வரையான கால் நடைகளும் உயிரிழந்துள்ளன.

இதற்கமைய வடக்கு மாகாணத்தில் இதுவரை 22 ஆயிரத்து 500 மாடுகளும், 12 ஆயிரத்து 365 ஆடுகளும் உயிரிந்துள்ளது. இதேபோன்று 64 ஆயிரந்திற்கும் மேற்பட்ட கோழிகளை காணவில்லை, மாடுகள் வளர்ப்பிற்கான கொண்டகைகள் 1,240 வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது எனவும. கால் நடைத் திணைக்களம் மத்திய கால் நடை அமைச்சு மற்றும. அணர்த்த முகாமைத்துவப் பிரிவிற்கு அறிக்கையிட்டுள்ளனர்.

இதேபோன்று 256 ஆட்டுப் பட்டுகளும் அடித்துச் செல்லப்பட்டதோடு மேலும் பல ஆயிரம் கால் நடை போராடுவதாகவும அறிக்கையிடப்பட்டுள்ளதோடு இது தொடர்பில் இதுவரை மேற்கொண்ட கணக்கெடுப்பில் மூவாயிரம் மில்லியன் ரூபா இழப்பு கணக்கெடுக்கப்பட்டுள்ளதோடு இப் பெறுமதி மேலும் அதிகரிக்கும் நிலையே காணப்படுகின்றது.

இங்கே காணப்பெறும் படங்களில் இறந்த கால்நடைகளை அப்புறப்படுத்தி சுகாதாரச் சீர்கேட்டையும் நோய் தொற்றையும் தடுத்து நிறுத்தும் அர்ப்பணிப்பு உள்ள பணிகளை ஆற்றும் இளைஞர்கள் மற்றும் சமூக அக்கறை கொண்டவர்களையே நாம் எதிர்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் நகர சபை மாநகர சபை ஆகியவற்றின் உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும் என யாழ்ப்பாணத்தில் பிரசுரமாகியுள்ள ஒரு துண்டுப் பிரசுரத்தில் பாராட்டும் வகையில் தெரிவிக்கப்பெற்றுள்ளது

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>