இலங்கையில் சுற்றுலா மேற்கொண்டுள்ள இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன்

Share

இலங்கையில் தற்போது சுற்றுலா மேற்கொண்டுள்ள இங்கிலாந்து தேசத்தின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூனின் வருகையானது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது என எமது கொழும்புச் செய்தியாளர் அறிவித்துள்ளார்.

சர்வதேச அரங்கில் பலம்பொருத்திய பிரதமராக முன்னர் அவரது பதவிக் காலத்தில் அறியப்பட்டிருந்த கெமரூன்,அவர்கள் தனது மனைவியுடன் சாதாரண பிரஜைகளாக இலங்கையை சுற்றிப் பார்த்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அவர்கள் தங்கள் விஜயத்தின்போது புகழ்பெற்ற உல்லாசப் பயணங்கள் மேற்கொள்ளும் உனவட்டுன, மிரிஸ்ஸ, சிகிரியா, உடவலவ, பின்னவல, திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கும் சென்று மக்களோடும் உரையாடினார் எனவும் அறியப்படுகின்றது.

தமது இலங்கை விஜயத்தின்போது கடலில் குளித்து மகிழ்ந்த அவர்கள், வீதி ஓரங்களில் உள்ள சிறிய பெட்டிக்கடைகளிலும் உணவுண்டு பசியாறினர் என்றும் அறியப்படுகின்றது
இதேவேளை. முன்னாள் இங்கிலாந்து பிரதமர் கேமரூனை அடையாளம் கண்ட ஒரே இலங்மகைவாசி விமான நிலைய குடிவரவு அதிகாரி மாத்திரமே என்றும் எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>