இலங்கையில் மாகாண ஆளுநர்களின் தொடர் பதவி துறப்பு இடம்பெறுகையில் பிரதமரும் பதவியைத் துறப்பாரா? என கேள்வி எழுப்பும் சீலரத்ன தேரர்

Share

மாகாண ஆளுநர்கள் தொடர்ச்சியாக இராஜிநாமா செய்து வரும் சூழலில், தற்போதைய பிரதமரும் தனது பதவியை இராஜிநாமா செய்வாரோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என்று ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மத்திய மாகாண ஆளுநர் தனது பதவியை இராஜினாமா செய்தமைக்கு சில தரப்பினரின் அழுத்தங்களே காரணம் எனச் சந்தேகிப்பதாகத் தெரிவித்த அவர், அரசில் உள்ளவர்கள் அனைவரும் பதவிகளிலிருந்து விலகி, நாட்டை விட்டு வெளியேறுவதற்கு வழிவகுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், அடுத்தடுத்து நியமிக்கப்படும் ஆளுநர்கள் எத்தனை நாள்கள் பதவியில் நீடிப்பார்கள் என்பது கேள்விக்குறியே என்றும் அவர் குறிப்பிட்டார்.

நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் அண்மைய கருத்துகள் குறித்தும் சீலரத்ன தேரர் விமர்சித்தார். “தங்களுக்கு இன்னும் அதிகாரம் வழங்கப்படவில்லை என்று கிராமங்களுக்குச் சென்று கூறிவருவது அரசுன் மீதான நம்பிக்கையைச் சிதைக்கின்றது. அரசுக்கு முழு அதிகாரமும் இருக்கும்போது, அதிகாரமில்லை என்று கூறுவது பொய்யானதாகும். இளமைக் காலத்தில் போராட்டம் நடத்தியவர்களுக்குச் சிறிதளவேனும் அறிவு இருக்க வேண்டும். போதைப்பொருள்களை உட்கொண்டுவிட்டு மேடைகளில் பேசுகின்றார்களா என்று கேட்கத் தோன்றுகின்றது. இவர்களின் இத்தகைய பேச்சுகள் ஜனாதிபதியின் கௌரவத்துக்குப் பெரும் களங்கத்தை ஏற்படுத்துகின்றன” என்று அவர் சாடினார்.

இந்தச் சூழலில், மாகாண ஆளுநர்களைப் போல் கலாநிதியாக இருக்கும் தற்போதைய பிரதமரும் தனது பதவியை விரைவில் இராஜிநாமா செய்வாரோ என்ற பலத்த சந்தேகம் மக்கள் மத்தியில் நிலவுகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>