இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தீப்பந்த போராட்டம்!

Share

பு.கஜிந்தன்

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக இன்று மாலை சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்பாக தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டமானது ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை மற்றும் தீவக தொகுதி அமைப்பாளர் முருகவேல் சதாசிவம் அவர்களது தலைமையில் நடைபெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைகளில் தீப் பந்தங்களை ஏந்தியவாறு “நெருக்காதே நெருக்காதே பொருளாதாரத்தை நெருக்காதே, குறைத்திடு குறைத்திடு மின்சார கட்டணத்தை குறைத்திடு, அடிக்காதே அடிக்காதே ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே, குறைத்திடு குறைத்திடு பொருட்களின் விலைகளை குறைத்திடு என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை மற்றும் தீவக தொகுதி அமைப்பாளர் முருகவேல் சதாசிவம், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், சமூகமட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>