இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்துக்கு எதிரான துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டு வருகின்றது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இலண்டன் ஓவல் மைதானத்தில் இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் போட்டித் தொடர் இடம்பெற்றது.
இதன்போதே போட்டி இடம்பெற்ற ஓவல் மைதானத்திற்கு எதிரில் இலண்டன் தமிழ் அமைப்புக்களின் ஏற்பாட்டில் கண்டனப் போராட்டம் இடம்பெற்றது.
“கிரிக்கெட் மூலம் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை மறைக்காதே! , தமிழருக்கு நீதி வேண்டும்! , இனப்படுகொலைக்கு நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்! “எனும் பல கோசங்களை முன்வைத்து இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் புலம்பெயர்ந்து இலண்டனில் வாசிக்கின்ற தமிழர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>