(கனகராசா சரவணன்)
இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில், 16 இலங்கை சுகாதார வல்லுநர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்ட பயிற்சிக்காக இந்தியா நொய்டாவில் உள்ள தேசிய தொழில் முனைவோர் மற்றும் சிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்தால் (NIESBUD) முன்னெடுக்கப்பட்ட ஒருவார பயிற்சியில் பங்கேற்றனர் என இந்திய உயர்தானியர் காரியாலம் அறிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயம் 17ம் திகதி அன்று செவ்வாய்க்கிழமை (17 ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டது
இலங்கை அரசாங்கத்தின் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தின் குறிப்பிட்ட வேண்டுகோள்களின் அடிப்படையில், ஒரு வார கால இந்த பிரத்தியேகத் திட்டத்தில், சுகாதாரக் கல்வி மற்றும் பயிற்சி முறைகள்; பாடத்திட்ட வடிவமைப்பு, கற்பித்தல்-கற்றல் வழிமுறைகள், மதிப்பீடு மற்றும் மதிப்பிடுதல்; வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை மூலம் அணிகளுக்கு வலுவூட்டுதல்; பல்துறை சுகாதார அணிகளில் திறம்படத் தொடர்புகொள்ளுதல் உள்ளிட்ட தலைப்புகளில் விரிவான தொழில்நுட்ப அமர்வுகள் மார்ச் 10 -16 வரை இடம்பெற்றது
இதில் திறன் மேம்பாட்டுத் துறையில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் வலுவான இருதரப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது .ITEC போன்ற தற்போதுள்ள அனைத்து திட்டங்களுக்கும் மேலாக, இலங்கை நிபுணர்களுக்காக ஆண்டுதோறும் 700 பிரத்தியேக பயிற்சி இடங்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டதன் மூலம் இது மேலும் மேம்படுத்தப்பட்டது.
இந்த மேம்படுத்தப்பட்ட திறன் மேம்பாட்டுக் கட்டமைப்பை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 2025-ல் இலங்கைக்கு மேற்கொண்ட பயணத்தின்போது அறிவித்தார். இந்தியாவின் தேசிய நல்லாட்சி மையம் மற்றும் இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் ஆண்டுதோறும் சுமார் 300 இலங்கை குடிமைப் பணி அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுவதால், இந்தியாவின் இந்த மேம்படுத்தப்பட்ட திறன் மேம்பாட்டு முயற்சி தற்போது ஆண்டுதோறும் 1000 இலங்கையர்களுக்குப் பயனளிக்கிறது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.