ஈரான் கடற்படையின் இரண்டாவது கப்பலில் இருந்த படையினர் அனைவருத் கொழும்பில் தரையிறக்கப்பட்டனர்.
ந.லோகதயாளன்.
ஈரானின் இரண்டாவது கப்பலில் இருந்த அனைவரும் கொழும்பில் தரையிறக்கப்பட்டுள்ளனர் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடல் எல்லைக்குள் தற்போது நிறுத்தப்பட்டுள்ள ஈரானிய இரண்டாவது கப்பலான புஷேரின் (Bushehr) கொழும்புத் துறைமுகத்திற்குள் உள்ளே நுழைய அனுமதி வழங்கப்பட்டது.
ஈரானியக் கடற்படையின் ஒரு கப்பல் அமெரிக்காவால்இலங்கைக் கடலில் தகர்க்கப்பட்டது. இதன் பின்பு இலங்கையை அண்மித்த இரண்டாவது ஈரானியக் கப்பல் கொழும்புத் துறைமுகத்திற்குள் உள் நுழைய அனுமதி கோரியது.
ஈராணிய கப்பலால் கோரப்பட்ட அனுமதி தற்போது இலங்கை அரசால் வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியின் பிரகாரம் கப்பலில் இருந்த 208 பணியாளர்களும் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு இறக்கப்பட்டுள்ளனர்.
பணியாளர்கள் கொழும்பில் தரையிறங்கியதும் கப்பல் திருகோணமலை துறைமுகத்தில் தரித்து நிற்க இலங்கை ஜனாதிபதிஅனுர குமார திசாநாயக்க அனுமதி வழங்கியுள்ளார்.