இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை கிளையின் ஏற்பாட்டில் தியாக தீபத்தின் நினைவேந்தல்!

Share

பு.கஜிந்தன்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் 25-09-2025 வியாழக்கிழமை அன்றையதினம் அராலி செந்தமிழ் சனசமூக நிலையத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இலங்கை தமிழரசு கட்சி வட்டுக்கோட்டை கிளையின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, தியாக தீபத்தின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நினைவுப் பேருரைகள் ஆற்றப்பட்டன. இறுதியாக நினைவேந்தலில் கலந்துகொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சண்முகநாதன் ஜயந்தன், உப தவிசாளர் க.இலங்கேஷ்வரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுகிர்தன், வலி. மேற்கு பிரதே சபையின் உறுப்பினர்கள், மாவீரர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இந்த நினைவேந்தலில் கலந்துகொண்டனர்.

 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>