இலங்கை தமிழரசு கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் கஞ்சாவுடன் கைது!

Share

பு.கஜிந்தன்

இலங்கை தமிழரசு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் 30ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றையதினம் 4 கிலோ 800 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரியாலை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய குறித்த உறுப்பினர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவரது நடவடிக்கைகள் தொடர்பாக பல மாதங்கள் குற்றவாளியைப் பின்தொடர்ந்த பொலிசார் இறுதியில் குற்றங்கள் அவதானிக்கப்பட்டவுடன் உடனடியாகக் கைது செய்ததாகவும் எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.

அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>