இலங்கை புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் 45 வது ஆண்டு பகிரங்கப் பொதுக்கூட்டம் நல்லூர் இளங்லைஞர் மண்டபத்தில் இன்று (3) மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றது.
1978 யூலை மாதம் 3 ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கட்சியின் 45 வது ஆண்டு விழாவில் கட்சியின் கடந்த கால மக்கள் சார் போராட்டங்கள் மற்றும் பொதுப் பணிகள் தொடர்பான புகைப்படங்கள் , புத்தகங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது.
இவற்றுடன் நடைபெற்ற ஆண்டு விழாவின் போது பல்வேறு மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்திய அமைப்பாளர்கள் உரையாற்றினர். இந் நிகழ்வில் கட்சி அமைப்பாளர்கள் , செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>