இளையராஜா அண்ணன் மகன் ஜெயன் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘ராஜாஸ் ப்ளேலிஸ்ட்’

Share

இசைஞானி’ இளையராஜாவின் அண்ணன் மகன் ஜெயன் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய திரைப்படத்திற்கு ‘ராஜாஸ் ப்ளேலிஸ்ட்’ என பெயரிடப்பட்டுள்ளது. வெங்கட் பிரபுவின் கதையில், யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். இசைஞானி இளையராஜாவின் அண்ணன் மகனான ஜெயன் தற்போது தமிழ் சினிமாவில் புதிய கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர் அறிமுகமாகும் இந்த புதிய திரைப்படத்திற்கு ‘ராஜாஸ் ப்ளேலிஸ்ட்’ என்று சுவாரஸ்யமான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இளையராஜாவின் குடும்ப வாரிசைத் திரையுலகிற்கு அறிமுகம் செய்யும் இந்த பிரம்மாண்டமான பொறுப்பை அவரது குடும்பத்தைச் சேர்ந்த மற்றுமொரு வெற்றி கூட்டணியான வெங்கட் பிரபுவும், யுவனும் இணைந்துள்ளனர். இப்படத்தின் கதைப் பகுதியை முன்னணி இயக்குனர் வெங்கட் பிரபு எழுதியுள்ள நிலையில், படத்திற்கான திரைக்கதை மற்றும் இயக்கத்தை சுஜித் என் சுப்ரமணியம் மேற்கொள்கிறார். இப்படத்தை எலிபென்டைன் எக்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரமணன் பாலகங்காதரன் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>