இவ்வருட கனடா ‘உதயன் சர்வதேச விருது விழாவில் 6 உயரிய விருதுகளைப் பெற்ற வெற்றியாளர்கள்!

Share

கடந்த 06-06-2026 அன்று சனிக்கிழமை கனடா ஸ்காபுறுறோ நகரில் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பெற்றிருந்த இவ்வருட கனடா ‘உதயன் சர்வதேச விருது விழாவில் 6 உயரிய விருதுகளைப் பெற்ற வெற்றியாளர்கள் பல பிரமுகர் நின்றிருந்த மேடையில் தங்கள் விருதுகளைப் பெற்றுக்கொண்டனர். மண்டபம் நிறைந்த விழாவாக நடைபெற்ற மேற்படி விருது விழாவில் கனடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகரசபைகளின் உறுப்பினர்கள் என பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இலஙகையிலிருந்து பாராளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தவைருமான மனோ கணேசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பயனுள்ள உரையொன்றையும் ஆற்றினார்.

விழாவிற்கு முனைவர் வாசுகி நகுலராஜா தலைமை தாங்கினார். சிறப்புரையை அனைத்துலக தமிழர் பேரவையின் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் ஆற்றினார். அன்றைய தினம் கனடா ஸ்காபுறோ நகரில் அமையப்போகின்ற ‘தமிழர் சமூக மையம்’ நிதி சேகரிப்புக் குழுவின் தலைவராகப் பணியாற்றி எதிர்பார்க்கப்பெற்ற தொகையைத் தாண்டி நிதி சேகரிப்பு திட்டத்தை வெற்றிகரமாக நகர்த்திச் சென்று கொண்டிருக்கும் வர்த்தகப் பிரமுகர் சாந்தா பஞ்சலிங்கம் அவரது அர்ப்பணிப்பையும் தியாகத்தையும் பாராட்டி கனடிய பாராளுமன்றம் மற்றும் ஒன்றாரியோ மாகாண அமைச்சு ஆகியவற்றின் சார்பில் வழங்கப்பெற்ற சான்றிதழைகளை சாந்தா பஞ்சலிங்கத்திடம் அரச பிரதிநிதிகள் கையளித்தார்கள்.

கனடா உதயன் பிரதம ஆசிரியரும் உதயன் சர்வதேச விருது விழாவின் நிறுவனருமான லோகன் லோகேந்திரலிங்கத்தின் சேவையைப் பாராட்டியும் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர்கள் லோகன் கணபதி மற்றும் அரிஸ் பாபிகியன் ஆகியோர் அரசு சார்ந்த சார்ந்த சான்றிதழ்களை வழங்கினார்கள். இவ்வருட கனடா ‘உதயன் சர்வதேச விருது விழாவில் 6 உயரிய விருதுகளைப் பெற்ற வெற்றியாளர்கள் அறுவரும் பல துறை சார்ந்த பிரமுகர் நின்றிருந்த மேடையில் தங்கள் விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.

அவரிகளில் கனடாவை வாழ்விடமாகக் கொண்டவர்களான கலாநிதி சாம்ப. சோமஸ்கந்த குருஜீ அவர்களுக்கு ‘கலை இலக்கிய மேன்மை விருது-2026-ஒன்றாரியோ’ விருதும், மொன்றியா நகரில் வாழும் சங்கீத ஆசிரியை செல்வமலர் மதுரநாயகம் அவர்களுக்கு கலை இலக்கிய மேன்மை விருது-2026-கியுபெக்’ விருதும், மிசிசாகா நகரில் வாழும் வர்த்தகப் பிரமுகர் கனேந்திரன் செல்வராஜா அவர்களுக்கு ‘வர்த்தக தொழிலதிபர் முன்னோடி விருது-2026-ஒன்றாரியோ’ விருதும், ‘உதயன் இளையோர் அடையாள விருது-ஒன்றாரியோ’ விருது செல்வி அபிரா ஜெயக்குமார் அவர்களுக்கும். கனடாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் கனடா- வன்னிச் சங்கம்’ அமைப்பிற்கு இவ்வருடத்திற்குரிய ‘தலைமைத்துவ விருது- ஒன்றாரியோ’ விருதும் இங்கிலாந்து வாழ் எழுத்தாளரும் கணக்காளருமான ‘வவுனியூர் உதயனன் ‘அவர்களுக்கு ‘கலை இலக்கிய மேன்மை விருது-2026-ஐரோப்பா’ விருதும் வழங்கப்பெற்றன.

மேற்படி விருது விழாவை சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நடத்த ஆதரவு வழங்கிய வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் நிறுவனங்களுக்கும் பாராட்டுப் பத்திரங்கள் வழங்கப்பெற்றன.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>