ஈரானின் சட்ட்விரோத எண்ணை வர்த்தகத்திற்கு ஒத்துழைக்கும் அல்லது ஈரானின் எரிசக்தி தயாரிப்புகளை வர்த்தகம் செய்யும் எந்தவொரு நிறுவனம் மீதும் அமெரிக்கா கடும் பொருளாதார தடைகளை விதிக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும் ஈரானின் கச்சா எண்ணை மற்றும் பெட்ரோகெமிக்கல் பொருட்களை எடுத்து சென்ற 8 நிறுவனங்கள் மற்றூம் 8 கப்பல்களை முடக்கப்பட்ட சொத்துகளாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அதேபோல் கோடிக்கணக்கான மதிப்பு கொண்ட ஈரான் எண்ணை பீப்பாய்களை சேமித்து விற்பனை செய்த ஆங்காங்கை சேர்ந்த நிறுவனத்துக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. அணுசக்தி திட்ட விவகாரத்தில் ஈரானுடன் அமெரிக்கா மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறது. இதனையடுத்து ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்து இருக்கிறது. தற்போது இரு நாடுகளிடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் பேச்சு வார்த்தை நடந்து வரும் சூழலில் இந்த புதிய மிரட்டலை அமெரிக்கா விடுத்துள்ளது.
ஈரானின் கச்சா எண்ணையை வாங்கினால் பொருளாதார தடை ஏற்படுமென அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>