ஈரானில் பேருந்து கவிழ்ந்ததில் 11 பேர் பலியாகி உள்ளனர். ஈரானின் மத்திய மர்காஜி மாகாணத்தில் சவே-ஹமீதன் சாலையில் சென்று கொண்டிருந்தபேருந்து ஒன்று திடீரென கவிழ்ந்தது.
இந்த சம்பவத்தில் பேருந்தில் இருந்த 11 பேர் உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பற்றி மாகாண போக்குவரத்து காவல்துறை விசாரணை நடத்தினர். இதில், பேருந்து ஓட்டுநருக்கு மயக்கம் ஏற்பட்டு இந்த விபத்து நடந்துள்ளது என்று கூறினர். ஈரானில், போக்குவரத்து ஒழுங்குமுறைகளை சரியாக மதிக்காதது, போதிய அவசரகால சேவை வசதிகள் இல்லாதது உள்ளிட்டவற்றால் விபத்துகள் நடக்கின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால், ஆண்டுக்கு 17 ஆயிரம் பேர் வரை விபத்துகளில் சிக்கி உயிரிழக்கின்றனர்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>