ஈரானுடனான போரில் அமெரிக்கா தோல்வியடைந்துவிட்டதென மசூத் பெசெஷ்கியன் கூறினார். இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது அமெரிக்கா ராணுவம் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் உச்ச தலைவர் உள்பட பலர் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உலகநாடுகளில் 30 சதவீதத்துக்கு மேல் எரிபொருள் வினியோகம் செய்ய பயன்படுத்தப்படும் ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்தது.6 மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் இந்த தாக்குதல் மற்றும் பிரச்சி னையில் ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் முயற்சியில் அமெரிக்கா பெரும் தோல்வி அடைந்தது. இது நேரடியாக ஈரானுக்கு சாதகமாக அமைந்தது. இதனிடையே ஹார்முஸ் நீரிணையை ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி முழுவதுமாக கைப்பற்றும் முயற்சியில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஈரான் உடனான போரில் அமெரிக்கா தோல்வியடைந்து விட்டதாக பகிரங்கமாக அறிவித்தார். இதுகுறித்து ஈரான் அரசு செய்தி நிறுவனத்துக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் அதில் கூறியதாவது: ஹார்முஸ் நீரிணையின் மீதான கட்டுப்பாடு மற்றும் அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு பணிய மறுத்ததை ஈரான் தனது வெற்றியாக கருதுகிறது. இதனால் உலக நாடுகள் வெறுக்கத்தக்க நாடாக அமெரிக்கா மாறியுள்ளது. ஈரானுடனான போரில் அமெரிக்கா முழுவதுமாக தோல்வியடைந்து சரணாகதி அடைந்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
ஈரானுடனான போரில் அமெரிக்கா தோல்வியடைந்துவிட்டதென மசூத் பெசெஷ்கியன் கூறினார்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>