கத்தார் மீதான தாக்குதல்களில் ஏற்பட்ட பெரும் சேதங்களுக்கு ஈரான் இழப்பீடு வழங்க வேண்டும் என்று என ஐ.நா. சபையிடம் கத்தார் அரசு முறையிட்டுள்ளது. ஈரான் ஏவிய ஏராளமான ட்ரோன்கள், ஏவுகணைகளால் ஏற்பட்ட அனைத்து சேதங்களுக்கும் முழு பொறுப்பேற்பது ஈரானின் கடமை என தெரிவித்து ஐ.நா.வுக்கு கத்தார் கடிதம் எழுதியுள்ளது. அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது டிரோன் மற்றும் ஏவுகணைகளை கொண்டு ஈரான் தாக்கியது. கத்தார், பஹ்ரைன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த எண்ணெய் நிலயங்களும் இந்த தாக்குதலில் குறி வைக்கப்பட்டன. இந்த நிலையில், தற்போது அமெரிக்கா -ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், ஈரானிடம் இழப்பீடு கோர கத்தார் முடிவு செய்துள்ளது.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>