ஈரான் உயிர்பிழைக்க போராடுகிறது ஈரான் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தாக்கு

Share

பாகிஸ்தானில் அமெரிக்காவும் ஈரானும் அமைதிபேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. பேச்சுவர்த்தை தோல்வி அடைந்துள்ள நிலையில், இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருப்பதாவது; ஈரானுக்கு எதிரான நடவடிக்கை மூலம், அவர்களின் அணு ஆயுதம் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களை நசுக்குவதில் வெற்றி அடைந்துள்ளோம். இந்த நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை. காசாவில் ஹமாஸ், லெபனானில் ஹிஸ்புல்லா, ஈராக்கில் உள்ள போராளிக் குழுக்கள், ஏமனில் ஹவுதிகள் என ஈரான் நம் கழுத்தை நெரித்துச் சுற்றி வளைக்க முயற்சி செய்தது. ஆனால் நாம் தான் அவர்களின் கழுத்தை நெரிக்கிறோம். அவர்கள் நம்மை முற்றிலுமாக அழித்துவிடுவதாக அச்சுறுத்தினார்கள். ஆனால், இப்போது அவர்களே உயிர்பிழைக்கப் போராடுகிறார்கள்” என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>