ஈரான் துறைமுக நகரம் மீது தாக்குதல் – 5 பேர் மரணம்

Share

மத்திய கிழக்கில் நடந்து வரும் போரில் ஈரான் அமெரிக்கா- இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தநிலையில், ஹார்முஸ் ஜலசந்தி அருகே உள்ள ஈரானின் துறைமுக நகரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதில் 5 பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே மத்திய கிழக்கு போரை நிறுத்த பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வருகிறது. போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக சவுதி அரேபியா, எகிப்து, துருக்கி ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பாகிஸ்தானுக்கு சென்றனர். இந்தநிலையில் அமெரிக்கா – ஈரான் இடையே போர் நிறுத்தம் கொண்டு வருவது தொடர்பாக பாகிஸ்தான் உள்பட 4 நாடுகளின் மந்திரிகள் ஆலோசனை கூட்டம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தொடங்கியது. இந்த கூட்டம் நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>