ஈரான் மீதான இஸ்ரேல் – அமெரிக்க தாக்குதலும், பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் தாக்குதலும் ஒரு வார்த்தை எட்டியுள்ளது. இந்நிலையில் ஈரான் தலைநகர் தெஹ்ரானை குறிவைத்து மீண்டும் தாக்குதல் தாக்குதல் நடந்து வருகிறது. தெஹ்ரானில் உள்ள மிக முக்கியமான மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் ஏவுகணை மழை பொழிந்தன. இந்தத் தாக்குதலால் விமான நிலையத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. ஓடுதளத்தில் நின்றிருந்த பல விமானங்கள் எரிந்து சாம்பலாகின. அந்தப் பகுதி முழுவதும் அடர்ந்த கரும்புகை சூழ்ந்துள்ளது. விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்து பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர். இஸ்ரேலிய போர் விமானங்களைத் தடுக்க ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்பு முயன்ற போதிலும், அது பலனளிக்கவில்லை எனத் தெரிகிறது. தாக்குதலைத் தொடர்ந்து மெஹ்ராபாத் விமான நிலையத்திலிருந்து அனைத்து விமானப் போக்குவரத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஏற்பட்டுள்ள உயிர்ச்சேதங்கள் குறித்து ஈரான் அரசு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
மெஹ்ராபாத் விமான நிலையம் பயணிகள் போக்குவரத்திற்கு மட்டுமின்றி, ஈரானின் ராணுவப் போக்குவரத்துக்கும் மிக முக்கியமான மையமாகும்.