உக்ரைனின் கீவ் பிராந்தியத்தில் தாக்குதல் நடத்திய ரஷியா – 4 பேர் உயிரிழப்பு

Share

ரஷியா- உக்ரைன் போர் 4 ஆண்டுகளை தாண்டி நடைபெற்று வருகிறது. அமெரிக்கா பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சி செய்தது. ஆனால், அமெரிக்காவின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. ரஷியா உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. மேற்கத்திய நாடுகள் உதவியுடன் உக்ரைன் அவற்றிற்கு பதிலடி கொடுத்து வருகிறது. என்றாலும் ரஷியாவின் தொடர் தாக்குதலை உக்ரைனால் சமாளிக்க முடியவில்லை. இதனால் சேதங்களை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் உக்ரைனின் கீவ் பிராந்தியத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள், கல்வி நிறுவனங்கள், என்டர்பிரைசர்ஸ, முக்கியமான கட்டமைப்பு ஆகியற்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளது. 15-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். அதில் 3 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. கீவ் பிராந்தியத்தில் உள்ள எரிசக்தி கட்டமைப்புகளை குறிவைத்து ரஷியா நேற்றிரவு தாக்குதல் நடத்தியதாக என ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த வாரம் ரஷியா- உக்ரைன் இடையிலான போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது. இதை அமெரிக்கா ஒத்தி வைத்த நிலையில் ரஷியா தாக்குல் நடத்தியுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>