உக்ரைனில் நள்ளிரவில் ரஷியா தாக்குதலில் 16 பேர் பலியாகினர்

Share

உக்ரைனுக்கு எதிராக 4 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவ படையெடுப்பு பெயரில் ரஷியா தாக்குதலில் ஈடுபட்டது. உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த சூழலில், உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட பல்வேறு நகரங்களில் நள்ளிரவில் ரஷியா தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் 16 பேர் பலியாகி உள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ரஷியா தாக்குதலை தீவிரப்படுத்த கூடும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சமீபத்தில் எச்சரித்திருந்த நிலையில், இந்த தாக்குதல் நடந்துள்ளது.  ஏவுகணைகள், டிரோன்கள், பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள் ஆகியவற்றை கொண்டு நடந்த இந்த தாக்குதல்களில் கட்டிடங்களில், குடியிருப்புகள் இடிந்து விழுந்துள்ளன. இதில் பலர் சிக்கியிருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. கீவ் நகர ஆளுனர் மிகோலா கலாஷின்க் கூறும்போது, எங்களுடைய அமைதியான நகரங்களும், கிராமங்களும் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன. கீவ் நகரில் மட்டும் குழந்தைகள் உள்பட 58 பேர் காயமடைந்து உள்ளனர் என கூறியுள்ளார். இதனால், பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்பிற்காக அவசரகால கூடாரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>