உக்ரைன் அருகே கருங்கடலில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது

Share

உக்ரைன் அருகே கருங்கடலில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது. உக்ரைன், ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. பேச்சுவார்த்தை முயற்சிகள் 

தொடர்ந்து தோல்வியடைந்து வரும் நிலையில் இருநாடுகளுக்கும் இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் அருகே கருங்கடலில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் துறைமுக நகரமான ஒடிசா அருகே கருங்கடலில் அன்டிகுவா அண்ட் பார்படா நாட்டு கொடியுடன் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல்  

மீது ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் சரக்கு கப்பலின் கேப்டன் உயிரிழந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>