உக்ரைன் தலைநகரில் ரஷியா ராணுவம் டிரோன் தாக்குதல் நடத்தியத்தில் 8 பேர் உயிரிழந்தனர்

Share

உக்ரைன் தலைநகரில் ரஷியா ராணுவம் டிரோன் தாக்குதலை நடத்தியத்தில் 8 பேர் உயிரிழந்தனர். ரஷியா-உக்ரைன் இடையிலான போர் சுமார் 5 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்ட நிலையில் அது தோல்வியில் முடிந்தது. இதனால் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் மீது நேற்று இரவு ரஷிய ராணுவம் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதலில் 8 பேர் உயிரிழந்த நிலையில், 34 பேர் படுகாயமடைந்துள்ளனர். நகரின் 28 இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் பொது கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>