உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 395வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். அதன்படி, போர் நிறுத்தம் தொடர்பாக 28 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை டிரம்ப் முன்மொழிந்துள்ளார். இந்த நிபந்தனைகளில் சிலவற்றை ஏற்க உக்ரைன் மறுத்து வருகிறது. இதனால் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உக்ரைனின் ஒடிசா நகர் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஒடிசா நகரில் உள்ள துறைமுகம், துறைமுகம் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர்.மேலும், 27 பேர் படுகாயமடைந்தனர்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>