உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் – 5 பேர் மரணம்

Share

உக்ரைன் , ரஷியா போர் இன்று 1 ஆயிரத்து 522வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்ட நிலையில் அது தோல்வியில் முடிந்தது. இதனால் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உக்ரைன் மீது நேற்று இரவு ரஷியா ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் நிப்ரொ உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து 47 ஏவுகணைகள், 600 டிரோன்கள் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர். 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>