உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் – 10 பேர்மரணம்

Share

உக்ரைன் மீது 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி ரஷியா போர் தொடுத்தது. இந்த போர் இன்று 1 ஆயிரத்து 473வது நாளாக நீடித்து வருகிறது. போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.

போர் நிறுத்தம் தொடர்பாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், ஒரு சில நிபந்தனைகளுக்கு இரு நாடுகளும் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உக்ரைனின் கார்கீவ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>