உக்ரைன் மீது ரஷியா நடத்திய டிரோன் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். உக்ரைன் ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் மீது ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் மாகாணம் நிகோபொல் நகர் மீது ரஷியா நடத்திய டிரோன் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த தாக்குதலில் 7 பேர் படுகாயமடைந்தனர்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>