உங்களை சிரிக்க, சிந்திக்க வைக்கிற படமாக “மை லார்ட்” இருக்கும் – நடிகர் சசிகுமார்

Share

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். ‘ஈசன்’ படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘கருடன், நந்தன்’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இவர் நடித்த ‘டூரிஸ்ட் பேமலி’ படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதற்கிடையில் “ஜோக்கர், குக்கூ, ஜப்பான்” ஆகிய படங்களை இயக்கிய ராஜுமுருகனின் ‘மை லார்ட்’ படத்தில் நடித்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக கன்னட நடிகை சைத்ரா ஜே ஆச்சர் நடித்துள்ளார். குரு சோகசுந்தரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இதன் அறிமுக நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் பாலா, மாரி செல்வராஜ், வெங்கடேஷ், விஜய் மில்டன், லிங்குசாமி, உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். சசிகு​மார் பேசும்​போது, “ ‘மை லார்ட்’ படம் நீதிமன்றத்தை மைய​மாக கொண்ட படம் இல்​லை. படத்​தில் நீதிமன்ற காட்​சிகள் பத்து நிமிடம்​தான் வரும். ஆனால் இந்​தக் கதை அதி​காரத்​தைப் பற்​றியது. அதி​காரம் ஒரு எளிய, கடைக்​கோடி மனிதனின் கையில் கிடைத்​தால் அவன் அதை எப்​படிப் பயன்​படுத்​து​வான்? அவன் அந்த அதி​காரத்​துடன் என்ன செய்ய முடி​யும்? என்​ப​தையே இந்த படம் கேள்​வி​யாக முன்​வைக்​கிறது. ‘மை லார்ட்’ என்ற வார்த்தை அந்த மனிதனின் மனநிலை​யை​யும் முத்​துச்​சிற்பி என்ற நபரை​யும் குறிக்​கிறது. அதனால்​தான் இந்த தலைப்பை தேர்ந்​தெடுத்​தோம். இந்த கதையை, ‘கதை​யில் எதை​யும் மாற்ற வேண்​டாம். கதை எப்​படி​யிருக்​கிறதோ அப்​படியே படம் எடுங்​கள்’ என்று முழுசுதந்திரம் கொடுத்​தார் தயாரிப்​பாளர். இப்​படிப்​பட்ட நம்​பிக்கை ஒவ்​வொரு இயக்​குநருக்​கும் கிடைப்​பது பெரிய விஷ​யம். அந்த நம்​பிக்​கைக்​காக தயாரிப்​பாளர் அம்​பேத் குமாருக்கு என் மனமார்ந்த நன்​றி. இந்த படம் கண்டிப்பாக எல்லோரையும் மகிழ்விக்கும். நீங்கள் படம் பார்த்து உண்மையாக பேசினால், அதுவே எங்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரம்” என்​றார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>