தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்த சில மாதங்களாக தேர்தல் பிரசாரம், பொதுக்கூட்டம் உள்பட பல்வேறு அரசியல் நடவடிக்கைகளில் திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்-அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், தமிழக சட்டசபை தேர்தல் நிறைவடைந்த நிலையில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது மனைவி கிருத்திகா, மகள் தன்மயா உடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய்க்கு புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்திற்கு காலை மனைவி, மகளுடன் வந்த உதயநிதி ஸ்டாலின் விமானம் மூலம் துபாய்க்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார். உதயநிதி ஸ்டாலின் குடும்பத்துடன் அடுத்த ஒரு வாரத்திற்கு துபாயில் சுற்றுலா மேற்கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>