உத்தரகாண்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு

Share

இந்த நிலநடுக்கம் மதியம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. உத்தரகாண்டின் பாகேஷ்வர் பகுதியில் மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மதியம் 2.40 மணியளவில் ரிக்டர் அளவில் 3.6 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 30.02 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 79.95 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.

அந்தமான் கடலில் மதியம் 12.06 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகி உள்ளது. இதனால், அந்தமான் நிகோபார் தீவுகளின் சில பகுதிகளில் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது. அது 90 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்று நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. எனினும், இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>