’உத்தரவை மீறி’ மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்கள்

Share

நடராசா லோகதயாளன்

தேர்தல்கள் ஆணைக் குழுவின் அறிவுறுத்தலையும் மீறி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் இடம்பெறுகின்றமை ஆணைக்குழுவின் கடிதத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் தொடர்பில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் எழுத்தில் கோரிய விடயத்திற்கு 2024-08-23 ஆம் திகதிய கடிதம் மூலம் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வழங்கிய பதிலில் 2024-08-03 திகதிய மாவட்ட அரச அதிபரின் கூட்டத்தில்
2024-08-15 ஆம் திகதிக்கு முன்னரும் 2024-09-22 ஆம் திகதிக்கு பின்னரான காலத்திலேயே மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நடாத்த முடியும் என தெளிவாக அறிவுறுத்தப்பட்டதாக பதிலளிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த காலத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நடாத்த முடியாது எனத் தெரிந்தும் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் முறையே 27 ஆம், 28 ஆம் திகதிகளில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>