உயர்தர பரீட்சை திருப்திகரமாக அமையவில்லை என்ற விரக்தியில் யாழ்ப்பாணத்தில் மாணவி உயிர்மாய்ப்பு!

Share

பு.கஜிந்தன்

க.பொ.த உயர்தரப் பரீட்சை திருப்திகரமாக அமையவில்லை என்ற விரக்தியில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவி உயிர்மாய்த்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சையினை திருப்திகரமாக எதிர் கொள்ள முடியவில்லை என்ற விரத்தியில் யாழ்ப்பாணத்தில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். இதன்போது தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியில் கல்வி பயின்ற சிறிகேசவன் ஸ்ரெபிகா (வயது 19) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த மாணவி 30ம் திகதி தி பரீட்சைக்கு தோற்றிவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அன்றைய பரீட்சை திருப்திகரமாக இல்லை என தாய் – தந்தையருக்கு கூறி கவலையடைந்துள்ளார். பின்னர் அவரது தந்தை அலுவலாக வெளியே சென்றவேளை குறித்த மாணவி வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயவாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

குறித்த மாணவி க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 7ஏ 2பி சித்திகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>