உரும்பிராயிலுள்ள வீடொன்றில் வெளிநாட்டு பணம் மற்றும் நகைகள் என்பன களவு!

Share

உரும்பிராயிலுள்ள வீடொன்றில் வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் நகைகள் என்பன களவாடப்பட் டுள்ளன.

நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை காலை வீட்டிலுள்ளோர் வெளியேறி மதி யமே வீடு திரும்பியுள்ளனர். இதன்போது வீட்டின் கூரை பிரிக்கப்பட்டிருந்ததை அவதா னித்துள்ளனர். வீட்டினுள் சென்று பார்த்த போது 900 யூரோ காசுத்தாள்கள், ஒன்றரை இலட்சம் ரூபா பணம் மற்றும் 4 பவுண் தங்க நகை என்பன திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>