மத்திய கிழக்கில் போர் நடந்து வருவதால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து உள்ளது. விலையை குறைக்கும் நடவடிக்கையாக ரஷிய எண்ணெய் மீதான தடைகளை அமெரிக்கா சில நாட்களுக்கு முன்பு நீக்கியது. இந்தநிலையில் ஈரான் எண்ணெய் மீது விதித்திருந்த தடையை ஒரு மாதத்துக்கு நீக்குவதாக அமெரிக்கா அறிவித்து உள்ளது. இந்த தடை நீக்கம் ஏற்கனவே போக்குவரத்தில் உள்ள ஈரான் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க கருவூலத்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் கூறியதாவது: ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் வெற்றி பெற்று வருகிறோம். தற்போது கடல் போக்குவரத்தில் தேங்கி உள்ள ஈரானின் எண்ணெயை விற்பனை செய்ய 30 நாட்களுக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளது. உலகிற்கான இந்த விநியோகத்தால் 14 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் உலக சந்தைகளுக்கு விரைவாக வரும். இது உலகளாவிய எரிசக்தியின் அளவை விரிவுபடுத்தி, ஈரானால் ஏற்பட்ட விநியோகத்தின் மீதான தற்காலிக அழுத்தங் களைக் குறைக்க உதவும். உலகச் சந்தைகளுக்கு விநியோகத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
உலகச் சந்தைக்கு வருகிறது 14 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் – அமெரிக்கா அறிவிப்பு
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>