தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம்(த.வெ.க.) 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றதை தொடர்ந்து விஜய்க்கு கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிவித்திருப்பதாவது, “வெற்றி பெற்ற விஜய் அவர்களே! கலை உலகின் சகபயணி என்ற முறையில் உங்களை வாழ்த்துகிறேன் உலகத் தமிழர்கள் உற்றுப் பார்க்கும் வெற்றி உங்களுடையது வெற்றி – தோல்வி இரண்டுமே பாரங்கள் தோல்வி என்பது முதுகில் சுமக்கும் பாரம்; வெற்றி என்பது தலையில் சுமக்கம் பாரம் சமூகம் உங்களிடம் எதிர்பார்க்கிறது மக்கள் உங்களுக்கு வாக்களிக்கும் முன்பே மக்களுக்கு நீங்கள் வாக்களித்து விட்டீர்கள் அந்த வாக்குகளை நிறைவேற்றுவதில் இருக்கிறது உங்கள் ஆட்சியின் மாட்சி உங்கள் கட்சிக்கும் ஆட்சிக்கும் வாழ்த்துக்கள்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகத் தமிழர்கள் உற்றுப் பார்க்கும் வெற்றி – விஜய்க்கு வைரமுத்து வாழ்த்து
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>