உலகின் மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதி நாடாக இந்தியா மாறும் என ராஜ்நாத் சிங் கூறினார்

Share

உலகின் மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதி நாடாக இந்தியா மாறும் என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். அகில்யாநகர் மாவட்டம் ஷீரடியில் 200 ஏக்கர் நிலத்தில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி ஆலை கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் 2 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையை மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். பின்னர் விழாவில் அவர் பேசியதாவது: ஒரு காலத்தில் ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடாக மட்டுமே இந்தியா பார்க்கப்பட்டது. ஆனால், இன்று நிலைமை மாறிவிட்டது. அடுத்த 25 முதல் 30 ஆண்டுகளில், உலகிலேயே ஆயுதங்களை மிக அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா மாறுவதை எந்த ஒரு சக்தியாலும் தடுத்து நிறுத்தமுடியாது. பாதுகாப்பு துறை உற்பத்தியில் தனியார் பங்களிப்பை 50 சதவீதமாக உயர்த்துவதே நமது முக்கிய இலக்கு. பாதுகாப்பு துறையில் தனியார் நிறுவனங்கள் வெறும் நட்டுகள் மற்றும் போல்ட்டுகளை மட்டும் சப்ளை செய்யும் நிறுவனங்கள் அல்ல. அவை அதிநவீன ஆயுத அமைப்புகளையே தயாரிக்கும் வல்லமை கொண்டவை ஆகும். மத்திய அரசின் தொலைநோக்கு பார்வையும், தனியார் துறையின் புதிய கண்டுபிடிப்புகளும் ஒன்றாக இணையும்போது, நாடு புதிய உச்சங்களை தொடும். இந்தியாவை வெடிமருந்துகள் மற்றும் ஆட்டோமேஷன் துறையின் உலகளாவிய மையமாக மாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>